Saturday, June 27, 2020

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்ய...

 தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்யும் வழிமுறைகள்:

தொழிலாளர் உதவி ஆணையரின் ஒப்புதல் பெறும் வரை தங்கள் கடவுச்சொல் (O.T.P) மூலமாக மட்டுமே உள்நுழைய முடியும்.
விண்ணப்பம் சமர்ப்பித்தவுடன் தங்களுடைய கைபேசிக்கு விண்ணப்ப எண் அனுப்பபடும்.
தங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் விளக்கம் தேவைப்படின் சம்பந்தப்பட்ட அதிகாரி விவரம் கேட்பார், கைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி மூலம் விவரம் கேட்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியலாம்.
தங்கள் விண்ணப்பம் சரியாக இருப்பின் அதிகாரியின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, தங்களுக்கான நிரந்தர பதிவு எண் வழங்கப்படும் , நிரந்தர பதிவு எண் மற்றும் கடவுச்சொல், தங்களது பதிவு செய்த கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். அதன் மூலமாக பதிவு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 விண்ணப்பம் மீண்டும் சமர்ப்பித்தல் வழிமுறைகள்:

தங்கள் கைபேசி எண் மூலம் மீண்டும் உள்நுழைந்து தங்களிடம் கேட்டகப்பட்ட கேள்விக்கு ஏற்ப விண்ணப்பத்தில் மாற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் விண்ணப்பம் சரியாக இருப்பின் அதிகாரியின் ஒப்புதல் பெற்று தங்களுக்கான நிரந்தர பதிவு எண் வழங்கப்படும் , நிரந்தர பதிவு எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்த கைபேசி எண் மூலமாக கிடைக்க பெறும். அதன் மூலமாக பதிவு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:
1. பணிச்சான்றிதழ்
தொழிலாளி சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கத்தின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் / தொழிலாளர் உதவி ஆய்வாளர் / கிராம நிர்வாக அலுவலர் / சென்னை மாவட்டத்திற்கான வருவாய் ஆய்வாளர் / பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர் / கட்டிடத் தொழிலில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனங்கள் / கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள வேலையளிப்பவர். மேலே குறிப்பிட்ட நபரிடமிருந்து பணிச்சான்றிதழ் பெற்று பதிவேற்றவும்.

2. சரிபார்ப்பு சான்றிதழ்
 கிராம நிர்வாக அலுவலர் கையொப்பம் பெற்று பதிவேற்றவும்.

3. அடையாளச் சான்றிதழ்
ஓட்டுநர் உரிமம், பள்ளி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரிடமிருந்து சான்றிதழ் அல்லது அரசு மருத்துவமனையின் சிவில் சர்ஜன் பதவிக்கு குறைவில்லாத மருத்துவரின் சான்றிதழ் (பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில்) பதிவேற்றவும்.

4. குடும்ப அட்டை
5. வங்கி கணக்குப்புத்தகம் முதல் பக்கம்
6. ஆதார் அட்டை
7. வாரிசாக பரிந்துரைக்கப்படுபவர் ஆவணம்
- திருமணத்திற்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் மற்றும் குடும்ப அட்டை துணை ஆவணமாக இருக்க வேண்டும் (அல்லது)
- திருமணத்திற்கு முன் பரிந்துரைக்கப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினராக (அல்லது) குடும்பத்திற்கு வெளியே உறுப்பினராக இருக்க முடியும். எனவே பரிந்துரைக்கப்படுபவருடன் தொழிலாளர் உறவு சம்பந்தப்பட்ட ஆவணம் பதிவுயேற்றவும்.

CRPF Recruitment 2020

CRPF Recruitment 2020 – 789 SI, ASI & Constable Posts Name of the Post:  CRPF SI, ASI & Constable Offline Form 2020 Post D...